Saturday, 28 January 2017

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் - மல்லூர்

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி


சேலம் மாவட்டம்,மல்லூர் வட்டத்தில் அமைத்து இருக்கும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மிகவும்   சிறப்பு வாய்ந்தவர்.இந்த கோவிலானது சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.ஏழைகளின் இறைவன் முருகன் என்ற வாக்கிற்கு ஏற்றார் போல இங்குள்ள தண்டாயுதபாணி சுவாமி தம்மை நாடி வரும் பக்தர்க்கு வேண்டியதை தரும் கருணா மூர்த்தியாக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.

இக்கோவில் மிக சிறியதாக இருந்தாலும் கூட,இறைவன் இங்கு குடி கொண்டு தன்னிடம் முறையிடும் பக்தர்களுக்கு வேண்டியதை தரும் தெய்வமாக அருள் புரிவதோடு அந்த பக்தர்கள் நெஞ்சிலும் வாசம் செய்து கொண்டு இருக்கிறார்.

சித்தர்கள் ஜீவ நாடிகளில் இந்த தளத்தின் அருமை மற்றும் இங்கு குடிகொண்டுள்ள சுவாமி தண்டாயுதபாணியின் மகிமைகள் வந்து இருக்கின்றன.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த தலத்தில் இறைவனை வணங்கிச்சென்ற பின்பு உடனடியாக குழந்தை வரம் பெற்று வருகின்றனர்.பல கோவில்கள் சென்றும் பரிகாரங்கள் செய்தும்   இனி எந்த பலனும் இல்லை என்று எண்ணி வருந்துபவர்கள் இங்கு ஒரு முறை வந்து இறைவனை வேண்டிச்சென்றால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது உறுதி.எனது நண்பர்கள் இங்கு வந்து வேண்டி உடனடியாக குழந்தை வரம் பெற்றதை நாங்கள் அனுபவத்தில் பார்த்து இருக்கிறோம்.குழந்தை இல்லாதவர்கள் இங்கு வேண்டிச்சென்ற உடனே குழந்தை பெரும்  நிகழ்வு இன்றும் இங்கு அதிசயமாக உள்ளது.

தை  பூசம்,பங்குனி உத்திரம் மற்றும் மாத சஷ்டி,கிருத்திகை,அமாவாசை,பௌர்ணமி நாட்களில் பூஜை நடைபெறும்.தை பூசம்  மிகவும்  விசேஷமாக நடைபெறும்.வேண்டி சென்ற பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறிய பின்பு இங்கு வந்து தை பூசா விழாவை சிறப்பித்து அன்னதானமும் செய்து வருகின்றனர்.

திறக்கும் நேரம் :

 காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

முகவரி :

வீரபாண்டி ரோடு,
சந்தை திடல் அருகில்,
மல்லூர்(PO),சேலம்(Dt).

No comments:

Post a Comment