Saturday, 4 February 2017

ஓதிமலை முருகன் கோவில் - ஸ்ரீகுமார சுப்ரமண்யர் ஐந்து திருமுகம், எட்டுத் திருக்கரங்கள்


ஓதிமலை சிறப்பு என்னவென்றால் படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன்,பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். அவர் தெரியாது நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத் தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறதுபடைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது.எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து உலகை படைத்தார். இந்த அமைப்பு ஆதிபிரம்ம சொரூபம்” எனப்பட்டது. முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாக பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார்.

முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார். சுவாமிமலை தலத்தில் சிவனுக்கு பிரணவத்தின் விளக்கம் சொன்ன முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்றும், சுவாமிக்கு ஓதிமலை முருகன்” என்ற பெயரும் ஏற்பட்டது.18 சித்தர்களில் ஒருவரான போகர் முருகனை தரிசிக்க பழனிக்கு செல்லும்போது அவருக்கு சரியாக வழி தெரியாத நிலை ஏற்பட்டது. வழியில் இந்த தலத்தில் தங்கிய போகர் முருகனை வேண்டி யாகம் நடத்தினார்.

அப்போது இத்தலத்து முருகன் அவருக்கு வழிகாட்டினார்.இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ வைத்து உத்தரவு கேட்கின்றனர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை நிறைவேற்றுகின்றனர். இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பிரம்மாவை முருகன் இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என அழைக்கப்படுகிறது.

கோவில் 1600 படிக்கட்டுக்கள் கொண்டது.


தலம்: ஓதிமலை
மூலவர்: ஸ்ரீகுமார சுப்ரமண்யர் (ஐந்து திருமுகம், எட்டுத் திருக்கரங்கள்)


கோவில் இருப்பிடம் :
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே இருக்கிறது ஓதிமலை. கோவையில் இருந்து அன்னூருக்கு பேருந்து வசதி உண்டு. கோவை- அன்னூர் சுமார் 35 கி.மீ. தொலைவு. அன்னூர் ஜங்ஷன் சாலையில் இருந்து ஓதிமலை ரோடு துவங்கும். இங்கிருந்து சுமார் 16 கி.மீ. பயணித்தால் ஓதிமலை அடிவாரம் வரும். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஓதிமலைக்கு சுமார் 26 கி.மீ. தொலைவு.
எப்படிப் போவது?: கோவை தவிர மேட்டுப்பாளையம், திருப்பூர், அவினாசி ஆகிய ஊர்களில் இருந்தும் அன்னூருக்குப் பேருந்து வசதிகள் உள்ளன. அன்னூரில் இருந்து ஓதிமலைக்குப் பேருந்து வசதி உண்டு.

நடைதிறப்பு : நண்பகல் 11:00 மணி - மாலை 4:00 வரை (மதிய பூஜை நண்பகல் 12:00 மணி).
ஆலயம் திறந்திருக்கும் தினங்கள்: திங்கள், வெள்ளி, வளர்பிறை சஷ்டி, பௌர்ணமி மற்றும் அமாவாசை, கிருத்திகை ஆகிய தினங்களில் மட்டுமே ஆலயம் திறந்திருக்கும். விசேஷ தினங்கள் விதிவிலக்கு.

நன்றி

https://kaumarapayanam.blogspot.in/2015/06/31.html
http://hinduspritualarticles.blogspot.in/2013/04/blog-post_10.html

ஓதிமலை முருகன் செய்த அதிசயம்

http://www.giriblog.com/2008/07/othimalai-murugan.html

No comments:

Post a Comment