Monday, 13 February 2017

ஸ்ரீ அகஸ்தியர் சித்தர் போற்றும் ஆப்பூர் ஒளஷதகிரி ஸ்ரீ நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள்

சென்னை நகருக்கு மிக அருகில் இப்படி ஒரு புண்ணியத் தலத்தில்- மிக உயர்ந்த மலைப் பகுதியில் ஸ்ரீநித்யகல்யாண பிரஸன்ன வேங்கடேச பெருமாள், தான் மட்டும் தனித்து வீற்றிருந்து அற்புதக் கோலத்தில் அருள் பாலிக்கிறார். 

பெருமாளின் திருத்தலம் அமைந்துள்ள மலை, ‘ஒளஷதகிரி’ எனப்படுகிறது. இந்த மலைப் பிரதேசம் முழுக்க முழுக்க மூலிகைச் செடிகள் நிரம்பிக் காணப்படுகிறது. இதற்கு ஒரு காரணம் சொல்கிறார், இந்த ஆலயத்தில் பூஜைகள் செய்து வரும்  பட்டாச்சார்யர். ‘‘இந்திரஜித்துடன் நடந்த போரில் பாதிக்கப்பட்ட ஸ்ரீராமபிரான் மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டார். ஸ்ரீராமர் மயங்கிய நிலையில் பேச்சு மூச்சில்லாமல் இருப்பதைப் பார்த்த அவரின் பக்தனான அனுமன், கண் கலங்கினார். ஸ்ரீராமரது மயக்கத்தை உடனே தெளிவிப்பது எப்படி என்று யோசித்தார். அப்போது ஜாம்பவான் சொன்ன யோசனைப்படி சஞ்சீவி மலையில் இருந்து குறிப்பிட்ட சில மூலிகைகளைக் கொண்டு வந்து ஸ்ரீராமபிரானுக்கு சிகிச்சை அளித்தால், குணம் பெறுவார் என்று அறிந்தார். அதன்படி சஞ்சீவி மலை இருக்கும் வட திசை நோக்கிப் புயல் வேகத்தில் பறந்தார் அனுமன். சஞ்சீவி மலையை அடைந்தவர் ஸ்ரீராமபிரானை குணமாக்கும் மூலிகை எது என்று சரிவரத் தெரியாமல் குழம்பினார். எனவே, அந்த மலையை அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு புறப்பட்டு வந்தார்.

சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு அனுமன் வரும்போது, அந்தப் பிரமாண்ட சஞ்சீவி மலையில் இருந்து சிறு சிறு பாகங்கள் ஆங்காங்கே பெயர்ந்து கீழே விழுந்தன. அதில் ஒரு சிறு பகுதிதான் இந்த ஒளஷத கிரி. சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்பதால், இங்கு ஏராளமான மூலிகைச் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான பல மூலிகைச் செடிகள் இங்கு இருப்பதால், இந்த மலையில் சற்று நேரம் அமர்ந்து, மூலிகைக் காற்றைச் சுவாசித்துச் செல்வதே பெரிய நிவாரணமாகக் கருதப்படுகிறது. ஒற்றைத் தலைவலி, ஆஸ்துமா, சர்க்கரை வியாதி, எலும்பு முறிவு உட்பட பல பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும் மூலிகைகள் இந்த ஒளஷத கிரியில் இருக்கின்றன. இந்தக் கோயிலுக்கு வரும் விஷயம் தெரிந்த பக்தர்கள், தரிசனம் முடிந்து செல்லும்போது சில மூலிகைகளையும் தங்களுடன் பறித்துச் செல்வது உண்டு.

எப்படி செல்வது?

செங்கல்பட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவள்ளூர் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் ஆப்பூர் வழியே செல்கின்றன. செங்கல்பட்டில் இருந்து புறப்படும் இந்தப் பேருந்துகள் ஜி.எஸ்.டி. சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் வரை பயணித்து, அதன் பின் இடப்புறம் செல்லும் சாலையில் பயணிக்கும். சிங்கப்பெருமாள்கோவில் ரயில்வே ஸ்டேஷன் லெவல் கிராஸிங்கைத் தாண்டி சுமார் ஆறு கி.மீ. பயணித்த பின், ‘ஆப்பூர் டாங்க் நிறுத்தம்’ என்ற இடத்தில் இறங்க வேண்டும். இங்கிருந்து, ஆலயத்தை அடைய சுமார் ஒரு கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். சிங்கப்பெருமாள்கோவிலில் இருந்து ஆட்டோவிலும் வரலாம். தாம்பரத்தில் இருந்து படப்பை செல்லும் நெடுஞ்சாலையில் படப்பைக்கு அடுத்து வரும் ஒரகடம் கூட் ரோட்டில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் இந்த ஆப்பூர் கோயில் அமைந்துள்ளது.



மலைப் பாதை துவங்கும் இடத்தில் வண்டிகளை வசதியாக நிறுத்திவிட்டுச் செல்ல முடியும். மலைக்கு மேலே வண்டிகள் செல்வதற்கு வசதி இல்லை. நடந்துதான் செல்ல வேண்டும். முதியவர்களும் மலை ஏறுவதற்கு வசதியாக படிகள் குறுகிய அளவில் இல்லாமல், விசாலமான அமைப்பில் கட்டப்பட்டிருப்பது சிறப்பான விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும். சுமார் 508 படிகள் கொண்ட இந்த மலையை இயல்பாக நடக்கும் சுபாவம் கொண்ட ஒருவர், அரை மணி நேரத்தில் இருந்து முக்கால் மணி நேரத்துக்குள்ளாக ஏறி விட முடியும். 

பிராகாரம் மற்றும் முன் மண்டபத்துடன் கூடிய கோயில். மண்டபத்தில் தசாவதாரக் காட்சிகள், அஷ்ட லட்சுமியின் வடிவங்கள் ஆகியவை சுதைச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. பெரு மாளைப் பார்த்தபடி கருடாழ்வார் காணப்படு கிறார். அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களும், வசிஷ்டர் உள் ளிட்ட ஏராளமான மகரிஷி களும் இந்த மலையில் தங்கி இருந்து, தவம் செய்து, பேறு பெற்றதாகச் சொல் கிறார்கள்.

பெருமாள் மட்டுமே இங்கு பிரதான தெய்வம். தாயார் உட்பட வேறு எந்த தெய்வங்களுக்கும் சந்நிதிகள் கிடையாது. எனவே, பெருமாளுக்குப் புடவை சார்த்தி வழிபடும் வழக்கம் இங்கு உள்ளது. ‘‘திருமணம் நிறைவேறாமல் இருப்பது, வேலையின்மை, கடன் சுமை போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து, பெருமாளுக்கு திருமஞ்சனம் சார்த்தி, புடவை அணிவித்து, ஐந்து முறை பிரதட்சணம் செய்து வழிபட்டால் குறைகள் போய் விடும். இது போன்ற மலை தங்கள் கனவில் வந்ததாகவும் பெருமாள் அழைத்ததா கவும் சில பக்தர்கள் சொல்கிறார்கள். எப்படியோ, ஓரளவு பக்தர்கள் தற்போது வர ஆரம்பித்திருப்பது சந்தோஷமான விஷயம். புரட்டாசி சனிக் கிழமை, வைகுண்ட ஏகாதசி, ஆங்கிலப் புத்தாண்டு தினம், ஸ்ரீராமநவமி, மாத பௌர்ணமி போன்ற தினங்கள் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக உள்ள இந்த ஆலயத்துக்கான பெருமாள் உற்சவர் விக்கிரகம், ஆப்பூர் கிராமத்தில் ஒரு பஜனை கோயிலில் உள்ளது.

ஸ்ரீ அகஸ்தியர் கூறும் ஒளஷதகிரி பெருமைகள் :


இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் அகுதொப்ப ஆப்பூர் கிரி என்று யாம் பலரையும் அங்கு செல்ல அருளானை கூறியிருக்கிறோம்.அங்கே எம்பெருமான் பெருமாள் வடிவிலே அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.முன்பு ஒருவன் ஓங்கி உரத்த குரலில் புலம்பினானே,(பெண்களுக்கு) திருமணம் ஆகவில்லை என்று,அந்த ஆப்பூர் கிரிக்கு சென்று நல்ல முறையிலே குறிப்பாக சுக்ர வாரம்,எத்தனை முறை இயலுமோ அத்தனை முறை அங்கு சென்று மானசீகமாக பிராத்தனை செய்து,அங்குள்ள வானரங்களுக்கு நிறைய உணவுகளைத் தந்து வேண்டிக்கொண்டு வந்தாலே திருமண தோஷம் நீங்கும்.பக்தன் ஒருவன் பரிபூரண சரணாகதியோடு சென்றால் இறைவன் அருள் உண்டு என்பது எமது வாக்கு.உலகியல் ரீதியான எத்தனையோ சிறப்புகளில்,திருமண தோஷம் நீக்குவதற்கும்,திருமணதிற்கு பிறகு கருத்து வேறுபட்டால் பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வதற்கும்,குழந்தை பாக்கியம் தருவதற்கும்,லோகாயத்திலே சுக்ரனின் அனுக்கிரகம் வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் செல்ல வேண்டிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று.அதையும் தாண்டி,இன்றும் 64 சித்தர்கள் அரூபமாக அங்கு தவம் செய்து கொண்டிருக்கிறார்கள்.முழுமதி தினமான பௌர்ணமி அன்று அங்கு சென்று மானசீகமாக வேண்டினால் வாய்ப்புள்ள பக்தர்களுக்கு,ஆத்மாக்களுக்கு ஒளி வடிவில் சித்தர்கள் தரிசனம் தருவார்கள்.எனவே அது ஒரு சித்த பூமி,ஜீவ பூமி,அது ஒரு மூலிகை வனம்.அங்குள்ள மூலிகைகள் பட்டு வருகின்ற சுவாசக்காற்று மனிதர்களின் பிணிகளை போக்க வல்லது.

கோயில் திறந்திருக்கும் நேரம் :


காலை 8 - 10:00. சனி மற்றும் ஞாயிறு நாட்களில் காலை 8 - 12.00.
மாலை நேரங்களில் கோவில் திறக்கபடுவதில்லை.விசேஷ நாட்களில் இந்த நேரம் மாறுபடும்.பக்தர்கள் கோவில் அச்சர்கரிடம் தொடர்புகொண்டு செல்வது நலம்.
ஆலயத் தொடர்புக்கு:
ஸ்ரீ ராம் பட்டாச்சார்யர். 
மொபைல்: 9952110109

Friday, 10 February 2017

சப்த கன்னிமார்களும், அவர்களை வழிபடுவதால் கிடைக்கும் அற்புத பலன்களும்


சப்த கன்னியர்கள்: 
சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது. கி.பி 510 ஆம் ஆண்டில் சப்தகன்னியர்கள் வழிபாடு சிறப்புற்று இருந்ததாக கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சப்தகன்னியர்கள் எழு தாய்மார்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். 

சப்தகன்னியர்கள் பிறந்த கதை: 
அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். 

நம் உடலோடு தொடர்பு கொண்டுள்ளவர்கள்: 
சப்தமாதர்களுக்கும் நம் உடலுக்கும் தொடர்பு உள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவை : பிராம்மி தோலுக்கு தலைவி. மகேஸ்வரி நிணத்திற்கு தலைவி. கவுமாரி ரத்தத்திற்கு தலைவி. நாராயணி சீழிற்குத் தேவதை. வாராஹி எலும்பின் தெய்வம். இந்திராணி சதையின் தேவதை. சாமுண்டி நரம்பின் தலைவி. 

ப்ராம்மி: 
அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள். 

மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.

வாராஹி: 
அம்பிகையின் பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. நமது பிருஷ்டம் பகுதி கழிவுகளை வெளியேற்றுவதும்,உடம்பைத் தாங்குவதும்,ஓய்வு தருவதும் ஆகும். இதன் சக்தியாக பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும். அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள். 

கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும். 

மகேஸ்வரி: 
அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள். 

இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள். 

இந்திராணி: 
அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள் இந்திராணி. இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். உலகத்தின் சகல உயிர்களும் தோன்ற பெண் பிறப்புறுப்புதான் காரணமாக இருக்கிறது. தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள். 

இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள். 

கௌமாரி: 
கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி. 

இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர் 

வைஷ்ணவி: 
அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும். 

சாமுண்டி: 
ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள். பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே! 

இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள். 

நன்றி
http://www.aanmeegamalar.com/

முருகப் பெருமானின் ஒன்று முதல் ஆறுமுகம் கொண்ட தோற்றம்

1. ஆறுமுகம் பன்னிரண்டு கரங்களுடன் -- அவினாசி அருகில் உள்ள திருமுருகன்பூண்டியிலும்,

2. ஐந்து முகம் எட்டு கரங்களுடன் -- பெத்திக்கோட்டை ஓதிமலையிலும்,

3. நான்கு முகம் எட்டு கரங்களுடன் திண்டுக்கல்சின்னாளப்பட்டியிலும்

4. மூன்று முகம் ஆறு கரங்களுடன் -- கோபி, காசிபாளையம் குமரன்கரட்டிலும்,

5. இரண்டு முகம் நான்கு கரங்களுடன் -- சென்னிமலையிலும்,

6. ஒரு முகம் தண்டாபுதபாணியாக -- பழனியிலும், மற்றும் அனேக இடங்களில் முருகப் பெருமான் வீற்றிருக்கிறார்.

1. ஆறுமுகம் கொண்ட கோலம் -திருமுருகன் பூண்டி தலம் முருகப் பெருமான் சிவபெருமானை வழிபட்ட தலமாகும். அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் போன்ற அருளாளர்கள் வழிபட்டுச் சென்றுள்ளனர். இத்தலத்தின் வழியாக சுந்தரர் செல்லும்போது, இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் பூத கணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக் கொண்ட தலம் எனக் கூறப்படுகிறது. இத்தலம் பிரம்மஹத்திதோஷம் நீங்கவும், மற்றும் சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் போன்ற நோய்கள் நீங்குவதற்கும் ஏற்ற தலமாகும். இதனால்பக்தர்கள் பல நாட்கள் இங்கு வந்து தங்கி தீர்த்தமாடி, இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.

2. ஐந்து முகம்கொண்ட திருக்கோலம் -போகருக்கு வழிகாட்டிய ஓதியப்பர் - ஓதிமலை முருகன்.

3. நான்கு முகங்களுடன் முருகப்பெருமான்- திண்டுக்கல் சின்னாளப்பட்டி என்ற தலத்தில் நான்கு முகங்களுடன் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால் பிரம்மனை முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். பின்னர் ஈசனின் மகனான கந்தக் கடவுளே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அப்போது அவர் நான்கு முகங்களுடன் இருந்ததாக கோவில் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4. மூன்று முகத்திருக்கோலம்: மூன்று முகமுருகனாக ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் தடப்பள்ளி கிராமம் காசிபாளையம் குமரன் கரட்டில் சிவகிரி ஸ்ரீ முத்து வேலாயுதசாமி ஆலயத்தில் அருள் பாலிக்கிறார். இது 800 ஆண்டுகள் பழமையானது. இத் தலத்தின் சிறப்பு என்னவென்றால் முருகப்பெருமான் மூன்று முகம் ஆறு கரங்களுடன் கிழக்கு பார்த்த முகமாக நின்ற நிலையில் தேவியருடன் அருள் பாலித்து வருகிறார்.எங்கும் முருகப்பெருமான் முன்பு அவரது வாகனமான மயிலை பீடத்தில் அமைத்திருப்பதை காணலாம். ஆனால் இத்திருக்கோவில்முன்பு சக்திவேல் அமையப்பட்டிருக்கிறது. இவ்வேல் சூரபத்மனை வதம் செய்ய ஆதிசிவசங்கர அம்மை உமையவள் சகிதம் இவ்வேலின் ஒருபுறம் சரவணபவ சக்ரமும் மறுபுறம் ஓம் என்ற எழுத்துடன் சூலாயுதமும் வஜ்ஜராயுதமும் பொறிக்கப்பட்டுள்ளது.

5..இரண்டு முகம்: இரண்டு முகம் உடைய சென்னிமலை முருகன் கோவிலில் செவ்வாய் தவிர மற்ற எட்டு கிரகங்களையும் காணலாம். ஏனெனில் இந்த மூலவர் முருகனே செவ்வாய் கிரகமாக வீற்றிருக்கிறார். எனவே இத்தல முருகப்பெருமானை வணங்கினால் நவக்கிரக தோஷங்களும்அகலும். சனிதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் என சகலகிரக பீடைகளும் உடனே விலகும்.

6.ஒரு முகங்கொண்ட முருகன்: பழனி முதலான அனேக இடங்களில் தரிசிக்கலாம்.

நன்றி
http://www.aanmeegamalar.com/

பிரம்மாவைப் போன்று ஐந்து முகங்களும் , எட்டு கரங்களும் கொண்ட ஸ்ரீ முருகபெருமானின் அற்புதம்


சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது .ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து முகங்களும் , எட்டு கரங்களும் கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800 செங்குத்தான படிகளை கொண்டது.

புஞ்சைப்புளியம்பட்டி யிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும்..

சுவாமிமலையில் சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் “ஓதிமலை” என்றும், சுவாமிக்கு “ஓதிமலை முருகன்” என்ற பெயரும் ஏற்பட்டது.

பதினெட்டு சித்தர்களின் ஒருவரான போகர் ஒதிமலையில் முதலில் முருகபெருமானை தரிசித்தார் பின்பு தான் முருக பெருமானின் பரிபூரண அனுகிரகத்தால் இறைவனின் வழிகாட்டுதலின் பேரில் பழனிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது .

ஓதிமலை முருகனை போகரின் ஆலோசனைப் படிதான் ஐந்து முகமுருகன் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது ...

இம்மலையின் உச்சியில் ஈசான திக்கிலிருந்து பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படும்.. இது பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது .. இங்குதான் போகர் முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம்.

இங்கு மண்ணே விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும் "விபூதிக்காடு - தான் காலப்போக்கில் பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில் அமைத்து அதில் கல்பீடம் வைக்கப்பட்டு உள்ளது ..

இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ வைத்து உத்தரவு கேட்கின்றனர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை நிறைவேற்றுகின்றனர். இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள்கூறுகின்றனர். ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன.

பச்சை பசேல் பின்னணியில் மலையேறுவது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். மலை பகுதியில் ஏராளமான மயில், குரங்குகளும், பல வண்ண பறவைகளும் உள்ளன. இது சித்தர்களின் இருப்பு கொண்ட மலைப்பகுதி என ஆத்மசாதகர்களால் உணரப்படுள்ளது .பிரம்மாவை முருகன் இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே அழைக்கப்படுகிறது. அடிவார -இரும்பறையில் பிரம்மன் சிறைப்பட்ட இடம் இன்றும் காணப்படுகிறது.

ஓதிமலை குறித்த புராணச் செய்தி :

படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். தெரியாமல் நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து உலகை படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்” எனப்பட்டது.

பரிகாரங்களில் மிகச் சிறந்தது கோவிலில் சுத்தமான நெய் தீபம் ஏற்றுவதே


தர்ம சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள், விரதங்கள், பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், பரிகார பூஜைகள் எல்லாம் காலம் காலமாக தொன்றுதொட்டு நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் விஷயங்களாகும். பரிகாரம் என்பது கஷ்ட நஷ்டங்கள், இடையூறுகள், தடைகளை அகற்றி நல்வழி காட்டுமாறு கடவுளிடத்தில் வேண்டிக் கொள்வதாகும்.

திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேலை), அந்தி பொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்.

மிக கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை, இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் சேர்த்து வந்தால் போதும். இப்படி தூங்கா விளக்கினை நெய்யால் மூன்று வேளைகளில் தொடர்ந்து தீபம் ஏற்றி வர நாம் எண்ணிய காரியம் நிறைவேறும்.

இத்தகைய தீபம் உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப்போடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது ஆகும். ஆகவே பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதைவிட ஒரு நெய்தீபம் ஏற்றுவது சிறந்தது.

நன்றி
http://www.aanmeegamalar.com/

Wednesday, 8 February 2017

தியான யோக ரகசியம் - குருதேவர் சிவானந்தரின் இருபது இணையற்ற போதனைகள்


1. நாள்தோறும் அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்திருங்கள். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அந்தக்காலம் கடவுள் தியானத்திற்கு மிகவும் உகந்தது.
2. பத்மாசனம், சித்தாசனம் அல்லது சுகாசனத்தில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக உட்கார்ந்து அரைமணி நேரத்திற்கு ஜபம், தியானத்தில் ஈடுபடுங்கள். இந்தக்கால அளவை மெல்ல மெல்ல மூன்று மணி நேரத்திற்கு உயர்த்துங்கள். பிரம்மச்சர்யத்தைப் பேணவும், ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், சிரசாசனத்தையும், சர்வாங்காசனத்தையும் செய்யுங்கள். உலாவுதல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒழுங்காக மேற்கொள்ளுங்கள். இருபது முறை பிராணாயாமம் செய்யுங்கள்.
3. ஓம் அல்லது ஓம் நமோ நாராயணா, ஓம் நமசிவாய, ஓம் நமோ பகவதேவாஸுதேவாய, ஓம் சரவணபவாய நம, சீதராம், ஸ்ரீராம், ஹரிஓம், காயத்ரி ஆகிய ஏதாவது உங்களுக்குப் பிடித்தமானதொரு மந்திரத்தை 108 தடவை முதல் 21600 தடவை வரை (200 மாலைகள் 108 = 21600) அன்றாடம் ஜபம் செய்யுங்கள்.
4. சாத்வீக உணவை உட்கொள்ளுங்கள். மிளகாய், புளி, வெள்ளைப் பூண்டு, வெங்காயம், புளிப்பான பொருள்கள், எண்ணெய், கடுகு, பெருங்காயம் ஆகியவற்றைத் தவிர்த்து மிதமாக உண்ணுங்கள். மனம் அதிகமாக விரும்பும் பொருட்களை வருடத்திற்கு இரு வாரங்கள் வெறுத்து ஒதுக்குங்கள். எளிய உணவை உட்கொள்ளுங்கள். பாலும் பழமும் தியானத்திற்கு உதவும் உணவுப்பொருட்கள். வாழ்வதற்கு உரிய மருந்து போன்று உணவை உட்கொள்ளுங்கள். மகிழ்வுக்காக உண்பது பாபம். ஒரு மாதத்திற்கு உப்பையும் சர்க்கரையையும் உட்கொள்வதை விலக்குங்கள். சாதம், பருப்பு, சப்பாத்தி ஆகியவற்றில் தொடுகறி இன்றி நீங்கள் வாழ முயல வேண்டும். குழம்பிற்கு உப்பு அதிகம் வேண்டும் என்றும், தேயிலை, காபி அல்லது பாலுக்கு அதிகம் சர்க்கரை வேண்டும் என்றும் கேட்காதீர்கள்.
5. பூட்டும் சாவியும் கொண்ட தனி அறையை தியானத்திற்கு பயன்படுத்துங்கள்.
6. ரூபாய்க்கு 10 பைசா வீதமோ அல்லது உங்களுடைய தகுதிக்கு ஏற்றவாறோ ஒவ்வொரு மாதமும் முடிந்தால் ஒவ்வொரு நாளும் ஒழுங்காக தருமம் செய்யுங்கள்.
7. கீதை, ராமாயணம், பாகவதம், விஷ்ணு சஹஸ்ரநாமம், ஆதித்ய ஹிருதயம், உபநிடதங்கள் அல்லது யோகவாசிஷ்டம் ஆகிய நூல்களைத் தவறாமல் தினமும் அரைமணி நேரம் வரை பாராயணம் செய்து தூய விசாரத்தை மேற்கொள்ளவும்.
8. வீரிய சக்தியை மிக ஜாக்கிரதையுடன் காப்பாற்றவும். வீரிய சக்தியே கடவுள்; அதுவே செல்வம்; வாழ்க்கையினுடைய சாரமும் அறிவினுடைய சாரமும் அதுவே தான்.
9. பிரார்த்தனை சுலோகங்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள் சிலவற்றை மனப்பாடம் செய்து ஜபம், தியானம் தொடங்குமுன் ஆசனத்தில் உட்காரும்போதே சொல்லி வாருங்கள். இது உங்கள் மனதை விரைவிலேயே உயர்வடையச் செய்யும்.
10. தீயவர்கள் தொடர்பு, புகைபிடித்தல், புலால் புசித்தல், மதுவகைகள் அனைத்தையும் அறவே விலக்கி ஒதுக்குங்கள். தீய சுபாவம் எதையும் வளர்க்காதீர்கள். நல்லார் தொடர்பில் தொடர்ந்து நில்லுங்கள்.
11. ஏகாதசி அன்று உபவாசம் இருங்கள். அல்லது பாலும் பழமும் சாப்பிடுங்கள்.
12. கழுத்திலோ அல்லது பாக்கெட்டிலோ அல்லது இரவில் தலையணைக்கு அடியிலோ ஜபமாலை ஒன்றை வைத்திருங்கள்.
13. நாள்தோறும் இரண்டு மணி நேரமாவது மௌனத்தைக் கடைபிடியுங்கள்.
14. எந்த நிலையிலும் உண்மையைப் பேசுங்கள். குறைத்து பேசுங்கள். இனிமையாகப் பேசுங்கள்.
15. உங்கள் தேவைகளைச் சுருக்கிக் கொள்ளுங்கள். உங்களிடம் நான்கு சட்டைகள் இருந்தால் அவற்றை மூன்று அல்லது இரண்டாகக் குறையுங்கள். மகிழ்வோடும் நிறைவோடும் வாழுங்கள். வேண்டாத கவலைகளை விடுத்து நில்லுங்கள். எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள். உயரிய சிந்தனையைக் கொண்டு விளங்குங்கள்.
16. ஒருவருக்கும் தீங்கு செய்யாதீர்கள். அன்பு, பொறை, தயை இவற்றால் கோபத்தை அடக்குங்கள்.
17. வேலைக்காரர்களை நம்பி வாழாதீர்கள். தன்னம்பிக்கையே எல்லா பண்புகளுக்கும் தலையானது.
18. படுக்கைக்குச் செல்லும் முன் அன்று நீங்கள் செய்த தவறுகளை ஒவ்வொன்றாக நினைத்துப் பாருங்கள். பெஞ்சமின் பிராங்களின் போன்று அன்றாட டயரியையும் தன்னைத் திருத்தும் பட்டியலையும் தயாரித்து வாருங்கள். முன் செய்த தவறுகளை எண்ணி வருந்தாதீர்கள்.
19. ஒவ்வொரு நிமிடமும் கூற்றுவன் வருகையை நினைந்து நில்லுங்கள். கடமையை நிறைவேற்றுவதில் எப்பொழுதும் பின் வாங்காதீர்கள். நன்னடத்தையை மேற்கொண்டு ஒழுகுங்கள்.
20. காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருக்கும் போதும், இரவில் உறங்கச் செல்லும் பொழுதும் இறைவனை நினையுங்கள். ஆண்டவனிடம் பூரண சரணாகதி அடையுங்கள்.

ஆத்மீக சாதனைகள் அனைத்தினுடையவும் சாராம்சம் இதுவேயாகும். இது உங்களை மோட்ச வாயிலுக்கு அழைத்துச் செல்லும். இவ்வரிய ஆத்மீக நியதிகளை ஒழுங்காகக் கடைபிடிக்க வேண்டும்.  இதில் எந்தவிதமான மனத்தளர்ச்சிக்கும் இடம் தரக்கூடாது.

ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !!!

Tuesday, 7 February 2017

கோட்டையூர் எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள்


பொதுவாக ஒருவரின் கர்மவினைகளை இன்னொருவர் வாங்கிக் கொள்ள முடியாது. அவரவரது கர்மவினையை அவரவர்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்றுதான் சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனாலும், பிறரது கர்மவினைகளை வாங்கிக் கொள்ளும் இத்தகைய சக்தி படைத்த மகான்கள் இருக்கத்தான் செய்தார்கள்; இன்றும் நம் குறிப்பிடத்தக்க ஒருவர்தான்-எச்சில் பொறுக்கி ஸ்ரீஆறுமுக சுவாமிகள் எச்சிக்கலை சுவாமிகள், கர்மவினைச் சித்தர், எச்சிக்கலையும் பொறுக்கும் சுவாமிகள் (அதாவது பக்தர்களுக்கு எந்த விதமான சிக்கல் இருந்தாலும், அதைத் தானே வாங்கிக் கொண்டு பொறுத்து ஆள்பவர்) என்றெல்லாம் இவரை அழைப்பார்கள். அழுக்கான காவி வேஷ்டியே இவரது ஆடை முழங்கால் வரைக்குமான ஒரு சட்டை அணிந்திருப்பார். பார்ப்பதற்குப் பரதேசி போல் தோற்றமளிக்கும் இவருக்கு அடர்ந்து வளர்ந்த தாடி, சடைமுடி இவர் ஜீவ சமாதி ஆகி. 28 வருடங்கள் ஆகின்றன.


திருச்சி - மதுரை சாலையில் திருச்சிக்கு அடுத்து வருவது விராலிமலை இங்குதான் ஆறுமுக சுவாமிகளின் காலம் கழிந்தது. ஜீவ சமாதி ஆனது காரைக்குடிக்கு அருகே உள்ள கோட்டையூரில். ஒரு வைகாசி விசாகத்தன்று சுவாமிகள் சமாதி ஆனார். வைகாசி மாதம் விசாகத்தன்று தான் முக்தி அடைந்து விடுவேன் என்கிற தகவலை சுவாமிகள் தன் சீடர்களிடம் முன்னமேயே சொல்லி இருந்தார். சுவாமிகள் ஜீவ சமாதிஆகும் நாள் பற்றிக் குறிப்பு. பல ஓலைச் சுவடிகளில் இருந்ததாகவும் பிரமிப்பூட்டும் தகவலைச் சொல்கிறார்கள் அவரது பக்தர்கள்.


விராலிமலையில் முருகப் பெருமான் குடி கொண்ட மலையில் - தெற்குமலை அடிவாரத்தில் ஒரு குகையில் பல காலம் வசித்து வந்தார் ஆறுமுக சுவாமிகள். குகையில் வேல் வடிவத்தை பிரதிஷ்டை செய்து அங்கேயே வாழ்ந்தார். பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் இவரைத் தேடி வந்தார்கள். சுவாமிகளின் எட்டு வயதிலேயே மூதேவி (வாராஹி என்றும் சொல்கிறார்கள்) அவரது உடலில் குடி கொண்டாளாம். இத்தகையோருக்கு வாக்குப் பலிக்கும். செயல்பாடுகள் முரட்டுத்தனமாக இருக்கும். யாராவது இலையில் சாப்பாட்டைக் கொடுத்தால், சாப்பிட்டு முடித்து விட்டு,  அந்த இலையைப் பத்திரமாக மடித்து ஒரு மூலையில் வைப்பாராம். தூர எறிய மாட்டார். சில நேரங்களில் தான் இருக்கும் குகைக்குள்ளேயே சாப்பாட்டை வாரி இறைப்பாராம். இப்படி எச்சில் இலையை மடித்து வைத்துப் பத்திரப்படுத்துகிறாரே என்று இதைப் பார்க்க நேரிடும் அவரது பக்தர்கள் சிலர் சில நேரங்களில் முகம் சுளிப்பார்களாம்.


எச்சில் என்பது அசூயைப்படக் கூடிய ஒரு விஷயம் அல்ல. அசுத்தம் அல்ல. மனிதர்களின் மனதில்தான் வேறுபாடு வேரூன்றி இருக்கிறது. என்பதை சுவாமிகள் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். இதனால்தான் ஆறுமுக சுவாமிகள் எச்சில் பொறுக்கி சுõவமிகள் ஆனார். கர்மவினைகளை வாங்கிக் கொள்ளும் சக்தி படைத்த மகான் ஒருவர் விராலிமலையில் வசித்து வருகிறார் என்கிற தகவல் வெளியூர் பக்தர்களுக்கு எப்படி தெரிந்தது?

சுவாமிகளின் நெடுநாளைய பக்தர் ஒருவர் சொன்னது; கர்மவினையால் நான் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தேன். எத்தனையோ ஜோசியரிடம் போனேன். பரிகாரங்கள் சொன்னார்கள். எல்லாவற்றையும் செய்தேன். பலன் இல்லை. கடைசியில் நாடி ஜோதிடர் ஒருவரிடம் போனேன். அவர் சில ஓலைச் சுவடிகளைப் பார்த்து விட்டு, கர்மவினைகளைப் போகக்கக்கூடிய சித்தர் ஒருவர் விராலிமலையில் இருப்பதாக ஓலை சொல்கிறது. அங்கே போய் அவரைத் தேடிக் கண்டுபிடித்து உங்கள் பூர்வ வினைகளைப் போக்கிக் கொள்ளுங்கள் என்றார். அதன்படி குடும்பத்தினருடன் விராலிமலைக்குப் பயணமானேன். ஆறுமுக சுவாமிகளையும் அங்கே தேடிக் கண்டுபிடித்து. என் கர்மவினைகளை அவர் வாங்கிக் கொண்டார். அதன் பிறகு என் வாழ்க்கை பிரகாசமடையத் தொடங்கியது.

இன்னொரு பக்தரின் கர்மவினைகளை சுவாமிகள் வாங்கிக் கொண்டிருந்தபோது. திடீரென அவரது ஒரு காதில் இருந்து சீழ் வழிந்தது. நான் உட்பட உடன் இருந்த பக்தர்கள் அனைவரும் பதறிப் போய் விட்டோம். பிறகுதான் சுவாமிகள் சிரித்தப்படியே சொன்னார்; இது அவனது கர்மவினை எனக்கு வந்து விட்டதல்லவா.... அதான் சீழ் ரூபத்தில் வெளியேறுகிறது. இதுதான் இவரது மகிமை. சுவாமிகள் இருக்கும்போது மட்டும்தான் என்றில்லை.... இன்றும் அவரது ஜீவ சமாதி தேடி கோட்டையூருக்கு வரும் பக்தர்களின் கர்மவினைகளை வாங்கிக் கொண்டு அருள் புரிந்து வருகிறார். இவரது சன்னிதியில் மனமுருகிப் பிரார்த்திக்கும் எந்த ஒரு பக்தரின் கோரிக்கையையும் சுவாமிகள் கைவிடுவதில்லை.

கர்மவினைச் சித்தர் என்று எல்லா பக்தர்களாலும் அழைக்கப்படும் இவர். தான் வாழ்ந்த காலத்தில் தன்னைத் தேடி வந்த பக்தர்களின் கர்மவினைகளைத் தானே வாங்கிக் கொண்டார். இதற்கென இவர் வசித்த விராலிமலைக்குப் பல பக்தர்கள் அன்றாடம் தேடி வருவது வாடிக்கை. சில பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, அவ்வப்போது சுவாமிகள் வெளியூர்களுக்கும் பயணப்படுவதுண்டு. அப்படி சிதம்பரம், திருச்சி, சென்னை, தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்குச் சென்றிருக்கிறார். சுவாமிகளின் முன்னிலையில் தங்கள் வீட்டில் ஹோமம் போன்ற சுப நிகழ்வுகளை நடத்துவதற்காகப் பக்தர்களே வாகனத்தை ஏற்பாடு செய்து கூட்டிப் போவார்கள்.

கர்மவினைகளைப் போக்குவது ஒரு பக்கம் என்றாலும். இத்தகைய சித்த புருஷரின் ஆசியைப் பெறுவதற்காக சாதாரண பக்தர்களும் விராலிமலைக்கு வந்து செல்வது வழக்கம். சுவாமிகளுக்கு சாப்பாடு டீ ஏதாவது வாங்கித் தந்து விட்டு, அவரது உபதேச மொழிகளைக் கேட்டுச் செல்வார்கள் பல பக்தர்கள். அப்படித்தான் கோட்டையூர் நகரத்தார் அன்பரான ஏஎல். சிதம்பரமும் சுவாமிகளுக்கு பழக்கமானார். சுவாமிகளின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமானார் இவர். இவர்தான் தற்போது சுவாமிகளின் ஜீவ சமாதிக் திருப்பணிகளைக் கவனித்துக் கொண்ட வருகிறார்.

சுவாமிகளிடம் ரொம்ப ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். வாராஹி அவரிடம் குடி கொண்டிருப்பதால், அவர் சொல்லும் எந்த வாக்கும் பலிக்கும். எனவே, ரொம்பவும் ஏடாகூடமான ஆசாமிகள் சுவாமிகளிடம் நெருங்க மாட்டார்கள். அவர்பாட்டுக்கு ஏதாவது சொல்லப் போய், இருக்கக் கூடிய வாழ்க்கையும் பாழாகிப் போய் விடுமோ என்ற அச்சம்தான் இதற்குக் காரணம். சுவாமிகளுக்குத் தெரியும் - எவருக்கு எத்தகைய வாக்கு கொடுக்க வேண்டும் என்று அஞ்ஞானிகளுக்கு இது புரியாது. சுவாமிகளிடம் பல காலம் பழகக் கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்ததை அவரது திருவருள் என்றுதான் சொல்ல வேண்டும். விராலிமலையில் பல முறை சந்தித்து உரையாடி உள்ளேன். கோட்டையூரில் உள்ள என் வீட்டுக்கும் ஓரிரு முறை வந்து உணவு அருந்தி இருக்கிறார். சுவாமிகளின் ஆசிதான் என்னை இன்றளவுக்கு சுமுகமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. பொணம் எரியுது. இப்பதான் நெஞ்சுக்கறி தின்னுட்டு வந்தேன் என்பார் சுவாமிகள் சில வேளைகளில் இதெல்லாம் வாராஹியின் கொடூரமான சொரூபம்.

தான் சமாதி ஆகப் போகும் தினத்தை முன்கூட்டியே சொல்லி இருந்தார் சுவாமிகள். 18.5.81. வைகாசி மாதம் விசாக நட்சத்திரம். திங்கட்கிழமை. சுவடிகளில் சொல்லி இருந்தபடியும் சுவாமிகள் அறிவித்திருந்தபடியும் அவர் அன்றைய தினம் சமாதி ஆகி விட்டார். கோட்டையூரில் இந்த திசையில் ஒன்பது அடி ஆழத்தில் ஒரு குழி உள்ளது. என் ஜீவன் அடங்கியதும் அங்கே கொண்டு போய் சமாதி வையுங்கள். நான் சமாதி கொண்ட இடத்தைச் சுற்றி பின்னாளில் ஒரு நகர் தோன்றும். காடு நாடாகும் என்று ஏற்கெனவே சுவாமிகள் கூறி இருந்தபடி, அவரை ஒரு டாக்ஸியில் வைத்து விராலிமலையில் இருந்து, கோட்டையூர் கொண்டு வந்தோம். சுவாமிகள் சொன்ன குறிப்பின்படி - அவர் சொன்ன திசையில் - சொன்ன இடத்தில்- சொன்ன ஆழத்தில் ஒரு குழி இருந்தது. அங்கேயே சமாதி வைத்தோம் என்றார். 

சாதுக்களை அடக்கம் செய்யும் முறைப்படி விபூதி, வில்வம், புஷ்பம் போன்றவற்றை இட்டு அவரது சமாதியை நிரப்பினார்கள். திருவண்ணாமலையில் இருந்து ஒரு லிங்கத் திருமேனி கொண்டு வந்து, சுவாமிகளின் சமாதியின் மேல் பிரதிஷ்டை ஆனது. உத்ஸவர் திருமேனியும் உள்ளது. சுவாமிகளின் அருளாட்சி தினமும் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. குழந்தைபேறு, திருமணத்தடை, போன்ற பல குறைகளை சுவாமிகளின் சன்னிதியில் கொட்டி விட்டுச் செல்கிறார்கள். அனைத்து பிரார்த்தனைகளும். இங்கே நிறைவேறுகிறது.

சுவாமிகளின் ஜீவ சமாதிக்கு மதில்சுவர், தியான மண்டபம். கீழ்ப் புற மண்டபம் மேற்புற மண்டபம் கட்டி 23.5.94. அன்று பதின்மூன்றாவது குருபூஜையும், முதல் கும்பாபிஷேகமும் நடந்தேறியது. 22.5.2005-ல் இரண்டாவது கும்பாபிஷேகம் நடந்தது. ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் விசாக நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடிய நன்னாளில் குருபூஜை சிறப்பாக நடந்து வருகிறது. குருபூஜையின்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்து சாதுக்கள் வந்து திரள்கிறார்கள்.

தினமும் இரு கால பூஜை நடக்கிறது. கும்பம் வைத்து ருத்ர ஜபம் சொல்லி அபிஷேகம் செய்யப்படுகிறது. தவிர, வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று இரவில் சுவாமிகளுக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. அமாவாசை அன்று மதியம் அபிஷேகம் மற்றும் அன்னதானமும் பவுர்ணமி அன்று இரவு அபிஷேகமும் மதியமும் அன்னதானமும் நடக்கிறது. பல பக்தர்கள் ஓரிரவு இங்கு தங்கி, சுவாமிகளின் ஆசியை பெற்றுச் செல்வதை விரும்புகிறார்கள்.

பூர்வ ஜன்மத்தில் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் புண்ணிய பலத்தால் மட்டுமே இவரது ஜீவ சமாதியைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். பிற ஊர்களில் இருந்து வரும் சாதுக்களுக்கு இங்கே சிறப்பு மரியாதை செய்யப்படுகிறது. சுவாமிகளுக்கு பல இளைஞர்கள் சீடராக இருந்தார்கள். எனவே, ஆன்மிகத்தின் வலிமையையும், இறை பக்தியின் சிறப்பையும் அவர்கள் மனதில் புகுத்துவதற்காக ஆறுமுகம் தன்னை அறி தியான மையம் ஒன்றைக் தொடங்கி இருக்கிறார் ஏஎல். சிதம்பரம். பக்தியைத் தவிர, பண்பாடு தொடர்பான பல விஷயங்களையும் இளைஞர்களுக்கு போதிப்பதற்காகத்தான் இந்த மையம்.

கர்மவினையால் அவதிப்படுபவர்கள்தான் இந்தக் கலியுகத்தில் அதிகம். இறை அருளால் ஏராளம் சாதித்த எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகளின் திருச்சன்னிதியைத் தேடி செல்லுங்கள். உங்கள் குறைகளைக் கொட்டுங்கள். அவரது திருவடி தரிசனம். உங்களைத் திடப்படுத்தும், நம்பினோரைக் கைவிட மாட்டார் ஆறுமுக சுவாமிகள்!

தகவல் பலகை
தலம்    : கோட்டையூர்.
சிறப்பு    : எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகளின் ஜீவ சமாதி.
எங்கே இருக்கிறது?: 
காரைக்குடியில் இருந்து திருச்சி செல்லும் வழியில் காரைக்குடியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது கோட்டையூர் திருச்சியில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவு. கோட்டையூர் மெயின் ரோட்டில் இருந்து சுமார் ஒண்ணரை கி.மீ. தொலைவு உள்ளே சென்றால் சுவாமிகளின் ஜீவ சமாதி.
எப்படிப் போவது?
திருச்சி-காரைக்குடி சாலையில் பேருந்துகளில் பயணித்தால் கோட்டையூரில் இறங்கிக் கொள்ள வேண்டும். இந்த சாலையில் பயணிக்கும் சில பேருந்துகள் கோட்டையூர் நிறுத்தம் வழியாக வராமல் பைபாஸ் சாலையில் செல்லும். அத்தகைய பேருந்துகள் என்றால், கோட்டையூர் ஸ்ரீராம் நகர் என்று கேட்டு இறங்கிக் கொள்ள வேண்டும். பட்டுக்கோட்டை, அறந்தாங்கி போன்ற பல ஊர்களில் இருந்தும் கோட்டையூருக்குப் பேருந்து வசதி உண்டு. கோட்டையூர் மெயின் ரோட்டில் இருந்து ஜீவ சமாதிக்கு ஆட்டோ வசதி இருக்கிறது.

தொடர்புக்கு: ஏஎல். சிதம்பரம் 37, வெங்கடாசலம் செட்டியார் தெரு.
கோட்டையூர் -  630 106. 
(காரைக்குடி அருகே)
போன்: 04565-286587 +91-9443406587

நன்றி:
திருவடி சரணம்,Dinamalar.

அகத்தியர்


தேவர்கள் அனைவரும் இந்திரனின் முன்னால் போய் நின்றனர். தேவாதி தேவ! உலகில் அநியாயம் பெருத்து விட்டது. அரக்கர்களின் அட்டகாசத்தால், எவ்வுலகிலும் பக்தர்களால் யாகம், பூஜை, புனஸ்காரங்கள் செய்ய முடியவில்லை. எங்களுடைய அவிர்ப்பாகம் கிடைக்காததால், நாங்கள் படும் வேதனைக்கு எல்லையில்லை. எங்கள் சக்தி குறைந்து, அசுரசக்தி வேகமாகத் தலைதூக்குகிறது. நல்லவர்கள் நிம்மதியின்றி உள்ளனர். கெட்டவர்களோ, அந்த ராட்சஷர்களுடன் கைகோர்த்து சுகபோக வாழ்வு நடத்துகின்றனர். கெட்டவர்களின் தரம் உயர்ந்தால், நல்லவர்களும் நம் மீதான நம்பிக்கையை இழந்தல்லவா விடுவார்கள். தேவர் தலைவனே! தாங்கள் தான் எங்களைக் காத்தருள வேண்டும், என்றனர். இந்திரன் தேவர்களின் குறையை கருணையுடன் கேட்டான். தேவர்களே! கலங்க வேண்டாம். தேவராயினும், மனிதராயினும், சிறு பூச்சி புழுவாயினும், அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக் கேற்ப பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். எனினும், இதுகண்டு நீங்கள் அஞ்சத் தேவையில்லை. அசுரர்களில் உயர்ந்தவனான தாரகன் தவவலிமை மிக்கவன். கடலுக்குள் மறைந்து வாழும் சக்தி படைத்தவன். பிரம்மாவின் அருளால் சாகாவரம் பெற்றவன். ஒரு கும்பத்தின் அளவே உருவமுடைய ஒருவரே அவனைக் கொல்ல முடியும். ஆனால், அவன் குறிப் பிட்டுள்ள அளவு உயரமுள்ளவர் எவரும் பூவுலகில் இல்லை. பிரம்மனால் கூட அப்படிப்பட்டவரைப் படைக்க முடியாது. இருப்பினும், பிறந்தவர் மாள்வது உறுதி. நீங்கள் அமைதி காக்க வேண்டும். நான் அவர்களை கடலுக்குள் வசிக்க இயலாத அளவுக்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். பின்னர், அவர்களது தொந்தரவு குறையும், என்றான்.
தேவர்கள் அரைகுறை மனதுடன் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பினர். இந்திரன் ஆழ்ந்து யோசித்தான். கடலை வற்றச்செய்வது என்பது எப்படி ஆகக்கூடிய காரியம். என்ன செய்வது? என குழம்பிப் போயிருந்த வேளையில், அதுவே சரி, என ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டான். அக்னிதேவனை தன் சபைக்கு வரச்செய்தான். அக்னி! நீ உடனே பூலோகத் துக்குச் செல். கடலுக்குள் அரக்கர்கள் ஒளிந்து கிடந்து நம் இனத்தாரை துன் புறுத்துகின்றனர். நீ கடலே வற்றும்படியாக வெப்பத்தை உமிழ். கடல் காய்ந்து போனதும், அரக்கர்கள் நம்மை துன்புறுத்தி விட்டு, ஓடி ஒளிய இடம் இல்லாமல் தவிப்பர். இதைப்பயன்படுத்தி அவர்களைக் கொல்ல ஏற்பாடு செய்வோம்,  என்றான். அக்னி சிரித்தான். இந்திரரே! தங்கள் யோசனை எனக்கு நகைப்பை வரவழைக்கிறது. அரக்கர்களை அழிப்பதே தேவர் களையும், பூலோக மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான். உலகில் கடல் இல்லை என்றால் மழை எப்படி பொழியும்? மழை இல்லை என்றால் ஆறுகள் எப்படி ஓடும்? ஆறுகள் இல்லையென்றால், நமக்கு அவிர்பாகம் தரும் யாகங்களை நடத்த தீர்த்தம் கூட இல்லாமல் போய் விடுமே. நீர் வாயுவை அழைத்துப் பேசும். ஒருவேளை வறண்ட காற்றால் அவன்  கடலை வற்றச்செய்யக்கூடும், என்றான்.
இந்திரனுக்கு கோபம் வந்துவிட்டது. ஏ அக்னி! நான் இட்ட வேலையைச் செய்யும் வேலைக் காரன் நீ. தலைவனாகிய என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா?இந்த யோசனை யெல்லாம் இல்லாமலா நான் உன்னை கடலை வற்றச்செய்யும்படி பணிப்பேன். சொன்னதைச் செய்,என்றான்.அக்னியோ ஒரேயடியாக மறுத்து விட்டான். தாங்கள் என் எஜமானர் தான். எஜமானர் என்பதற்காக, அந்த எஜமானர் உள்ளிட்ட அத்தனை பேரையும் அழிக்கும் பாவத்தை நான் செய்ய மாட்டேன், எனச் சொல்லி விட்டு,கைகட்டி நின்றான். அடுத்து வாயு வரவழைக்கப் பட்டான். அவனிடமும் இந்திரன், கடல் சமாச்சாரம் பற்றிக் கூற, வாயுவும், அக்னி சொன்ன அதே பதிலையே சொன்னான். அக்னியும், வாயுவும் சொல்வதிலும் நியாயமிருக்குமோ என்னும் அளவுக்கு இந்திரனும் சிந்திக்க ஆரம்பித்து விட்டான். அத்திட்டத்தை கைவிட்டு, அவர்களை அனுப்பி விட்டான். ஆனால், சில நாட்களில் அரக்கர்களின் அட்டகாசம் அதிகரித்து, யாகங்கள் முழுமையாக நின்று போயின. யாக குண்டங்களில் அசுரர்கள் மாமிசத்தையும், ரத்த மழையையும் பொழிந்து தீட்டை உண்டாக்கினர். எந்த யாகமும் நடைபெறாமல் தேவர்கள் மெலிந்து போயினர். இப்போது, இந்திரனின் கோபம் அக்னி மற்றும் வாயுவின் மீதே திரும்பியது.
மீண்டும் அவர்களை வரவழைத்து, ஏ அக்னி! ஏ வாயு! அன்று நான் சொன்னதை நீங்கள் செய்யாமல் போனதால், அரக்கர்கள் தங்கள் அட்டகாசத்தை முடித்து விட்டு,  கடலுக்குள் போய் ஒளிந்து கொள்கின்றனர். கடலுக்குள் மறைந்திருப்பவர்களை யாரால் கண்டுபிடிக்க இயலும்? அவர்களைக் கொல்வதென்பது எப்படி சாத்தியம்? என் சொல்லைக் கேளாததால் ஏற்பட்ட துன்பத்தின் பலனை அனுபவிக்கும் வகையில், நீங்கள் பூலோகத்தில் பிறந்து மனிதர்கள் படும் வேதனையை அனுபவிக்க வேண்டும், என சாபமிட்டான். அக்னியும், வாயுவும் பூலோகத்தில் பிறந்தனர். அக்னி மித்திரா என்ற பெயரிலும், வாயு வருணர் என்ற பெயரிலும் வாழ்ந்தனர். இச்சமயம், தேவலோக மங்கையான ஊர்வசி, தான் செய்த தவறால், இந்திரனின் சாபம் பெற்று பூலோகம் வந்தாள். அவள், ஒரு நீர்நிலையில் நீராடிக் கொண்டிருந்த போது, அவளை மித்திராவும், வருணனும் பார்த்தனர். அப்படி ஒரு பேரழகியை அவர்கள் கண்டதே இல்லை. அப்போது, அவர்களிடம் இருந்து வீரியம் வெளிப்பட்டது. மித்திரர் தன் கையில் இருந்தகும்பத்தில் வீரியத்தை இட்டார். வருணரோ, அதைத் தண்ணீரில் இட்டார். கும்பத்தில் இருந்த வீரியம் வளர்ந்து ஒரு குழந்தையாக மாறியது. அது சில நாட்களில் கும்பத்தில் இருந்து வெளிப்பட்டு உயிர் பெற்று நடமாடியது. அந்த உருவம் கமண்டலம், ஜடாமுடியுடன் தோற்றமளித்தது.
குடத்தில் இருந்து பிறந்ததால், அந்த குள்ள முனிவருக்கு கும்பமுனிவர் என்றும், குடமுனிவர் என்றும் தேவர்கள் அழைக்கலாயினர். அரக்கர்களைக் கொல்ல கும்ப அளவே உயரமுள்ள ஒரு முனிவர் பிறந்து விட்டதில் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இது ஒருபுறம் இருக்க, வாயுபகவான், தண்ணீரில் இட்ட வீரியத்தில் இருந்து வசிஷ்டர் பிறந்தார். இவர் அயோத்தியை நோக்கி போய் விட்டார். பிற்காலத்தில், இவர் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமருடன் சேவை செய்ய  வேண்டியிருந்ததைக் கருத்தில்  கொண்டு அங்கு சென்று விட்டார். கும்பமுனி உருவத்தில் தான் குள்ளம். ஆனால், அவரது சக்தியோ எல்லை மீறியதாக இருந்தது. அக்னியில் இருந்து பிறந்தவர் என்பதால், இவர் உடலில் வெப்பம் தகித்தது. தன் வெப்பத்தை தணிக்க தண்ணீரின் மீதே படுத்திருப்பார். அவரிடம், தேவர்கள் தங்கள் குறையை வெளியிட்டனர். சுவாமி! தங்களால் மட்டுமே அரக்கர்களை அழித்து எங்களைக் காக்க முடியும், என்றனர்.அகத்தியர் அவர்களுக்கு அருள் செய்வதாக வாக்களித்தார். தேவர்களைக்காக்கும் தனது கடமை தடங்கலின்றி நிறைவேற, தனக்கு வசதியான தண்ணீரிலேயே தவத்தை துவங்கினார். 12 ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீரில் படுத்த படியே இறைவனை தியானித்தார். இறைவன் அருளும் கிடைத்தது.
அரக்கர்களை சம்ஹாரம் செய்ய அவர்கள் மறைந்திருந்த கடலை நோக்கிச் சென்றார். தங்களை குள்ள முனிவர் ஒருவர் கொல்ல வந்துள்ளார் என்பதை அறிந்த அரக்கர்கள்  தண்ணீரை விட்டு வெளியே வரவே இல்லை. ஆனால், அகத்தியர் விடுவாரா என்ன? தண்ணீர் முழுவதையும், தன் உள்ளங்கைக்குள் அடக்கி சித்து விளையாட்டு செய்தார்.  ஒட்டுமொத்த கடல் நீரும் அவர் கைக்குள் வந்தது. தீர்த்தம் குடிப்பது போல் குடித்து விட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், அசுரர்கள் மீது பாய்ந்தனர். இரு தரப்புக்கும் கடும் சண்டை நடந்தது. முடிவில், அரக்கர்கள் கொல்லப்பட்டனர். கடலையே சுருக்கி சாப்பிட்டவர் என்றால் சும்மாவா? மேலும், உலகையே காக்க வேண்டிய  தேவர்களையே பாதுகாத்தவர் என்றால் அவரது சக்தி எத்தகையதாக இருக்கும்? அந்த மாமுனிவர், தான் வந்த வேலையை அத்துடன்  முடித்துக் கொள்ள வில்லை. மகாவிஷ்ணு அப்போது மனித அவதாரமான ராமாவதாரம் எடுத்து இலங்கையிலே இருந்தார். ராமனின் மனைவியான சீதாவை, அந்நாட்டு அரக்க அரசனான ராவணன்  தூக்கிச் சென்று விட்டான். அவளை மீட்பதற்காக பெரும்படையுடன் சென்றிருந்தும் கூட, அவரால் ராவணனை அவ்வளவு எளிதில் ஜெயிக்க முடியவில்லை. அங்கு சென்ற அகத்தியர், ராமனிடம் சூரிய வழிபாடு செய்வதன் மூலம் பெரும் பலம் பெறலாம் எனக்கூறி, ஆதித்ய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகங்களைப் போதித்தார். மேலும்  அவருக்கு சிவகீதையையும் கற்றுத் தந்தார்.
ராமபிரானின் இலங்கை வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களில் அகத்தியரும் ஒருவர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இமயமலைச் சாரலுக்கு வந்தார். அப்பகுதியில் தவமிருந்தார். ஒருமுறை, இந்திரத்துய்மன் என்ற அரசன் ஆண்ட நாட்டுக்குச் சென்றார். அவன் அகத்தியரின் மகிமை அறியாமல் உரிய மரியாதை கொடுக்கவில்லை. பெரியவர்களுக்கும்,  முனிவர்களுக்கும் மரியாதை கொடுக்காதவன் அரசாளத் தகுதியில்லாதவன் என்று கூறிய அவர், நீ யானையாகப் போ என சாபம் கொடுத்தார். அவன் வருந்தி அழுதான். கருணைக்கடலான அகத்தியர், மன்னா! நீ பக்தன் தான். யோகங்களில் தலை சிறந்தவன். ஆனால், மமதை என்னும் மதம் உன்னை ஆட்டிப் படைக்கிறது. அதன் காரணமாகவே, உன்னை மதம் பிடித்த யானையாக மாற்றி விட்டேன். இதுவும் நன்மைக்காகவே நடந்தது, என்றார். இதனால் எனக்கு என்ன நன்மை கிடைக்கும் சுவாமி? என் மனைவி, மக்கள் என் பிரிவால் துன்புறுவார்களே! என கேட்ட போது, மோட்சம் செல்லப் போகிறவன், சம்சார பந்தத்தை துறக்க வேண்டும். நீ சாட்சாத் மகாவிஷ்ணுவின் மூலம் சாபவிமோசனம் பெற்று வைகுண்டம் சேர்வாய். பிறப்பற்ற நிலை சித்திக்கும், என அருள் செய்தார்.
பிறவித்துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றால், யானையாகத் திரிவதில் தனக்கு சம்மதமே என்ற இந்திரத்துய்மன், காட்டில் அலைந்து திரிந்தான். பின்னர், முதலை ஒன்று அதன் காலைக் கவ்வ, அது ஆதிமூலமே என அலற, ஆதிமூலமாகிய மகாவிஷ்ணு அதனைக் காப்பாற்றி வைகுண்டம் சென்று சேர்த்தார். இப்படி  ஆடம்பரத்தில் சிக்கித் திளைத்த அரசர்களுக்கு வைகுண்ட பிராப்தி அளிப்பவராகவும் அகத்தியர் விளங்கினார். சிவசிந்தனை தவிர வேறு ஏதும் அறியாத அகத்தியர்,  தவத்திலேயே ஈடுபட்டிருந்தார். இமயமலையில், பார்வதி, பரமேஸ்வரனுக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், உலகை சமநிலைப்படுத்த அகத்தியரை பொதிகை  மலைக்கு அனுப்பி வைத்தார் சிவபெருமான். அவர் அங்கிருந்து புறப்பட்டு வரும் வழயில், ஒரு மரத்தில் சிலர் தலைகீழாகத் தொங்குவதைப் பார்த்தார். அவர்கள்  அகத்தியா! அகத்தியா! என கத்தினர். நீங்களெல்லாம் யார்? என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்? நான் தவவலிமை மிக்கவன். அக்னி- ஊர்வசி புத்திரன். என்னை  வடபுலத்தோர் மட்டுமே அறிவார்கள். தென்திசையிலுள்ள உங்களுக்கு என் பெயர் எப்படி தெரிந்தது? என்னிலும் வலிமை மிக்கவர்களாகத் திகழ்கிறீர்களே! உங்கள் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன், என்ற அகத்தியர் அவர்களை தன்னையறியாமல் வணங்கினார். அகத்தியா! நீ சொன்ன தெல்லாம் சரிதான். நாங்கள் உன் முன்னோர்கள். உன்னைப் போலவே தவவாழ்வு வாழ்ந்தவர்கள். இருப்பினும், எங்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை.  சொர்க்கம் செல்ல துறவறம் மட்டுமே உதவாது. இல்லறத்துக்கு பிறகே துறவறம் பூண வேண்டும். யார் ஒருவருக்கு ஆண் குழந்தை இல்லையோ, அவர்கள் பிதுர்களின் உலகை அடைய முடியாது. ஆண் குழந்தையே கொள்ளி வைக்க தகுதியானவன். அதனால் எங்கள் அன்பு மகனே! நீ திருமணம் செய்து கொள். ஒரு மகனைப் பெறு. அவன் மூலமாக எங்களுக் குரிய தர்ப்பணம், சிரார்த்தம் செய்து எங்களுக்கு சொர்க்கப்பாதையைக் காட்டு. இல்லாவிட்டால், நாங்கள் இந்த மரத்திலேயே தொங்க வேண்டியது தான், எனக் கூறி வருந்தினர். உயரத்தில் குள்ளமான அவருக்கு யார் பெண் தருவார்கள்?
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதென்பார்கள் நம்மவர்கள். அதுபோல, அகத்தியர் உயரத்தில் மிகச்சிறியவர் என்றாலும், அவரது மகிமைகளை அறிந்த பெண்மணி ஒருத்தி, நிச்சயம் வாழ்க்கைப்பட்டே தீருவாள். தென்னகம் வரும் வழியில், அவர் விதர்ப்பம் என்ற நாட்டை அடைந்தார். அந்நாட்டு மன்னன் யாகம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான். அதில் பங்கேற்க அகத்தியரை அவன் அழைத்துச் சென்றான். யாகத் தீ கொழுந்து விட்டெரிந்த போது, அதில் இருந்து ஒரு பெண்மணி வெளிப்பட்டாள். அப்போது அசரீரி தோன்றி, அகத்தியரே! நீர் இந்தப்பெண்ணை மணந்து கொள்ளும். இவளது பெயர் உலோபமுத்திரை, என்றது. அகத்தியரும் தெய்வ வாக்கிற்கேற்ப அவளது சம்மதத்தைக் கேட்டார். மாமுனிவரே! நான் இந்நாட்டில் தோன்றியதால், விதர்ப்ப தேசத்தரசரே என்தந்தையாகிறார். அவர் சம்மதம் தெரிவித்தால், நான் உங்கள் மனைவியாகிறேன், என்றாள். விதர்ப்ப அரசனும் சம்மதம் தெரிவித்தான். அப்போது உலோபமுத்திரை, அகத்தியரே! தாங்கள் என்னை மணம் முடிக்க வேண்டிய அவசியத்தை நான் தெரிந்து கொள்ளலாமா? என்றாள்.
லோபா! என் முன்னோர்கள் ஆண் குழந்தை இன்மையால், இறந்தும் திதி செய்ய நாதியின்றி தவிக்கின்றனர். அவர்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை. நானும் துறவியாகி விட்டதால், அவர்களின் நிலைமை மோசமாகி விட்டது. அவர்களின் ஆத்ம சாந்திக்காக, நான் திருமணம் முடிக்க வேண்டியுள்ளது. பிதுர் தர்ப்பணம் செய்யாதவன் நரகை அடைவான் என்பதை நீ அறிவாய். அவர்களின் விருப்பப்படி, நான் இல்லறத்தில் ஈடுபட்டு, ஒரு மகனை பெற்று, அவன் மூலமாக தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றா விட்டால், நான் நரகத்தை அடைவேன் என சாபமும் இட்டுள்ளனர், என்றார். இதைக் கேட்ட விதர்ப்ப மன்னன்,அகத்தியரே! உமக்கு எம் மகளை தருவதற்கில்லை. அப்படி தர வேண்டுமானால், நான் உமக்கு சீதனம் தரமாட்டேன். நீரே நான் கேட்கும் பொருளை எனக்குத் தர வேண்டும், என சொல்லி விட்டான். இதென்ன சோதனை? துறவியிடம் ஏது செல்வம்? இந்த மன்னன் கேட்கும் தொகைக்கு எங்கு போவேன்? என எண்ணிக்கொண்டிருந்த போது, லோபமுத்திரையும், அகத்தியரே! என்ன யோசனை? இப்பூவுலகில் இனிய இல்லறம் நடத்த பொன்னும் பொருளும் தேவை என்பதை நீர் அறிய மாட்டீரா? எனவே மிகப்பெரிய மாளிகை கட்டும் அளவுக்கு இடமும், அதை நிரப்புமளவுக்கு செல்வமும் கொண்டு வந்து என்னை மணம் முடித்துக் கொள்ளும். இல்லாவிட்டால், நீர் நரகம்செல் வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொள்ளும், என்றார்.
ஒரு பெண் தன்னை மணம் முடிக்க சம்மதித்ததே பெரிய விஷயம் என்ற முறையில், அகத்தியர் பலநாட்டு மன்னர்களையும் சந்தித்தார். அவர்களிடம் பொருளை யாசித்து பெற்றார். லோபமுத்திரை கேட்ட அளவுக்கு பொன்னும், பொருளும் கிடைத்தது. அதை அவளிடம் தந்து அவளைத் திருமணம் செய்து ஒரு மகனைப் பெற்றார். முன்னோர்கள் சாபம் நீங்கி அவரை வாழ்த்தினர். தன் மனைவி லோபமுத்திரையிடம், அடங்காமல் பிரவாகம் எடுத்த நதிபோல், என்னை ஆட்டி வைத்தவளே! இனி, நீ எனக்கு அடங்கி நடக்க வேண்டும். எந்தச் செல்வம் உனக்கு அவசியப்பட்டதோ, அந்தச் செல்வம் உலகம் முழுமைக்கும் கிடைக்க வேண்டும். சிவபெருமான் என்னை தென்னகம் சென்று பூமியை சமப்படுத்தச் சொன்னதன் தாத்பர்யம் உனக்குத் தெரியுமா? இந்த உலகத்தை அவரது பாதத்தால் ஓர் அழுத்து அழுத்தினால், அது சரியாகி  விடும்.ஏனெனில், இந்த பூமி அவருக்கே சொந்தமானது. ஆனால், உலகிலுள்ள உயிர்கள் சமநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் என்னை அனுப்பி வைத்தார். உலகம் செழிக்க தண்ணீர் தேவை. தண்ணீர் இருந்தால், உலகத்தின் எல்லாப்பகுதியும் தானாக செழித்து விடும். பயிர் பச்சைகள் வளரும். லோபா! நீ என் கமண்டலத்துக்குள் வந்து விடு, எனச்சொல்லி அவர் மீது தீர்த்தம் தெளித்தார். அவள் தண்ணீராக உருமாறி, கமண்டலத்தில் புகுந்தாள். அந்த கமண்டலத்துடன் அவர்  குடகுமலையை அடைந்தார். மலையின் ஓரிடத்தில் தன் கமண்டலத்தை வைத்து விட்டு லிங்கபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு காகம் பறந்து வந்தது. கமண்டலத்தை தட்டி விட்டது. கமண்டலம் சரியவே, உள்ளிருந்த தண்ணீர் ஆறாய்பிரவாகம் எடுத்தது.
பெரிய நீர்வீழ்ச்சியாய் அது கொட்டியது. இதை எதிர்பாராத அகத்தியர் கமண்டலத்தில் கொட்டியது போக மீதி தண்ணீரை மீண்டும் பத்திரப் படுத்திக் கொண்டார். பிரவாகம்எடுத்த நதி கடல் போல் பெருகியதால் சிவசமுத்திரம் என சிவனின் பெயரால் அதை அழைத்தார். அது கா என்னும் சோலைகளுக்குள் விரிந்து பரவிச் சென்றதால், காவிரி என்று பெயர் வைத்தார். பின்னர், மீதி தண்ணீருடன் பொதிகை மலைக்கு வந்த அவர், லோபா! நீ நிரந்தரமானவள். என் முன்னோரின் சாபம் தீர்த்த நீ, குடகில் நதியாய் பிராவகம் எடுத்தது போல், இந்த பொதிகையிலும் நதியாகி உலகை செழிப்பாக்கு. செழிப் புள்ள உலகத்தில் வறியவர் இருக்கமாட்டார்கள். வறியவர்இல்லாத பூமியில் சமத்துவமான வாழ்வு கிடைக்கும், என்று கூறி, கமண்டலத்தில் இருந்த மீதி நீரை, பொதிகையின் உச்சத்தில் இருந்த சிகரத்தில் கொட்டினார். அது பளபளவென மின்னியபடியே பாணம் போல வேகமாகப் பாய்ந்து ஒரு அருவியை உருவாக்கியது. அதற்கு பாண தீர்த்தம் என பெயர் வைத்தார். அந்த அருவி ஓரிடத்தில் தேங்கி, நதியாகப் பாய்ந்தது. அப்போது, ஓரிடத்தில் சிவபார்வதி தரிசனம் கிடைத்தது. அதைக் கண்ட  லாபமுத்திரை ஆனந்தமயமாகி மற் றொரு அருவியாய் வீழ்ந்தாள். அதற்கு கல்யாண தீர்த்தம் என பெயர் சூட்டினார் அகத்தியர். மீண்டும் ஓரிடத்தில் பக்தர்கள் நீராடி மகிழ ஒரு நீர்வீழ்ச்சியாய் மாறி, தன் கணவரின் பெயரால் அகத்தியர் தீர்த்தம் என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தாள். இன்றும் அதில் பக்தர்கள் நீராடி மகிழ்கின்றனர். தாமிரபரணி என்னும் பெயர் பெற்று அப்பகுதியை வளப்படுத்தினாள். பின்னர் அகத்தியர் பொதிகையில் தங்கி தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். உலகை சமநிலையாக்கிய மகிழ்ச்சியில் அங்கிருந்து மலைப்பாதையில் திருவனந்தபுரத்தை அடைந்தார். அங்கே அவர் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது. ஒரு சிலர் அகத்தியர் கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
தியானச் செய்யுள்
ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே
சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே
கடலுண்ட காருண்யரே
கும்பமுனி குருவே சரணம் சரணம்


காலம்: அகத்தியர் முனிவர் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 4 யுகம் 48 நாள் ஆகும்.
அகத்தியர் பெருமை: சித்தம் என்பது மனம், புத்தி, சித்து என்பது புத்தியால் ஆகிற காரியம். சித்தர் புத்தியைக் கட்டுப்படுத்தியவர். யோகத்தின் மூலமும், தியானத்தின் மூலமும் புத்தியைக் கட்டுப்படுத்தும் சித்தர்கள் சாகாநிலையைப் பெற்றவர்கள். தன் உடம்பை விட்டு மற்றொரு உடலில் புகுந்து, அதாவது, கூடுவிட்டுக் கூடு பாயும் ஆற்றல் பெற்றவர்கள். அவர்கள் தம் வாழ்வின் அனுபவத்தில் கண்டறிந்த பல உண்மைகளையும் நமக்குப் பாடல்களாகக் கொடுத்துச் சென்றுள்ளனர். மனிதர்களான நாம் நல்வழியில் சென்று செம்மையுற்று வாழ மனநலம்பெற ஆன்மிக வழிகளையும், உடல்நலம் பெற அரியவகை இயற்கை மருந்துகளையும் உணவுமுறைகளையும் தந்து சென்றுள்ளனர்.

எண்ணற்ற சித்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்ததாகப் பல நூல்கள் எடுத்துரைக்கின்றன. அவர்களில் 18 பேர்கள் மிகவும் புகழ்பெற்றவர்களாகக் கருதப்படுகின்றனர். 1. அகத்தியர் 2. போகர், 3. புலிப்பாணி, 4. திருமூலர், 5. இராமதேவர், 6. இடைக்காடர், 7. கருவூரார், 8. கமலமுனிவர், 9. கொங்கணர், 10. குதம்பைச்சித்தர், 11. சட்டைமுனிவர், 12. கோரக்கர், 13. பதஞ்சலி, 14. பாம்பாட்டிச் சித்தர், 15. தன்வந்திரி, 16. நந்தீசுவரர், 17. மச்சமுனி, 18. சுந்தரானந்தர்.


அனிமா, மகிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம், கரிமா எனும் எட்டு சித்திகளையும் அட்டமாசித்திகள் என்பார்கள். இப்படிப் பட்ட அட்டமாசித்திகளைப் பெற்றவர்களையே சித்தர்கள் என்றழைப்பர். இந்தப் பதினென்சித்தர்களும் அட்ட மாசித்திகளின் மூலம் பல அற்புதங்களையும் வியக்கத்தக்க நிகழ்வு களையும் நிகழ்த்தினார்கள் என்பதை புராணங்களின் வாயிலாக நாம் அறியலாம். அவ்வகையில் முதலில் நாம் காணப்போவது அகத்தியர். இவர் சித்தர்களில் முதன்மையானவர். அகத்தியர் என்ற குறுமுனியை முன்னிறுத்தாமல் சித்த வைத்தியர்கள் வைத்தியத்தை மேற்கொள்வதில்லை எனலாம். வைத்தியத்திற்கு தேவையான மூலிகையைப் பறிப்பதற்கு முன்பு, அதற்குத் தக்க பூசைகள் செய்து, அகஸ்தியர் சாபம் நசி நசி என்று கூறிய பின்பே அதனைப் பறிப்பார்கள்.


தேனான அகத்தீசர் சாதி பேதம்

கொற்றவனே வேளாளன் என்னலாகும்
துறந்ததோரு ஆயில்யம் முன்னாம் காலாம்
துப்புரவாய் அவர் பிறந்த நாளாச்சே


என்று அகத்தியர் வேளாளர் குலத்தில், மார்கழி மாதத்தில் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்ததை குறிப்பிட்டுப் பாடுகிறார். போகர். அகத்தியர் ஈசன் திருவருளை முழுமையாகப் பெற்றவர்.


சிவபெருமானுக்கும் பார்வதி அம்மைக்கும் திருமணம் நடைபெற்ற போது தேவர்கள், ரிஷிகள், கோடானு கோடி மானிடர் முதலானோர் திருக்கல்யாணம் காண இமயத்திற்குப் போய் சேர்ந்தனர். இதனால் வடகோடி தாழ்ந்து, தென்கோடி உயரும் அபாயம் நேரிட்டது. அப்போது அருகில் இருந்த அகத்தியரிடம் சிவபெருமான் வட தென்கோடிகளின் ஏற்றத்தாழ்வைச் சமனாக்க தென்திசை நோக்கிச் செல்லுமாறு பணித்தார். அம்மையப்பரின் திருமணக்கோலம் காண முடியாத வருத்தத்தில் ஆழ்ந்தார் அகத்தியர், இதை உணர்ந்த ஈசன் நீ இருக்கும் இடத்திலேயே நீ நினைக்கிற போது திருமணக்கோலத்தில் காட்சி தருவோம். என்று வாக்களித்தார். மனம் மகிழ்ந்த அகத்தியர் தென்திசை நோக்கிப் பயணித்து பொதிகை மலைச்சாரலில் வாசம் செய்தார். இதனால் பூமி சமநிலை அடைந்தது. கயிலையில் சிவன்பார்வதி திருமணமும் இனிதே நடந்தேறியது.



பொதிகை மலையில் தவமியற்றியும் சிவனை வழிபட்டும் வந்தபோது சதுரகிரியில் வசித்த சுந்தரானந்தர் முதலான தவமுனிவர்கள் பற்றிக் கேள்வியுற்றார். அவர்களைக் காணச் சென்றபோது, சுந்தரானந்தர், யூகிமுனி, கொங்கணவர், ஆகியோர் அகத்தியரை வரவேற்றனர். அவர்களின் ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடும்போது சிவபெருமானின் திருமணக்காட்சி காணும் ஆர்வம் ஏற்பட்டது. சிவன் தனக்களித்த வாக்கைகூறி வேண்ட, சிவபெருமானும் அவ்வாறே பார்வதியுடன் திருக்கல்யாணக் கோலத்தில் காட்சியளித்தார். விநாயகர், முருகர், பிரம்மா, விஷ்ணு, இந்திரன், வருணன், வாயு, அக்கினி, யமன், நிருதி, குபேரன் ஆகியோர் சூழ்ந்து நின்று காட்சி தந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.


அகத்தின் செயலறிந்து கூறிய காரணத்தால் அவருக்கு அகத்தியர் எனப்பெயர் வந்தது. பேரகத்தியம், சிற்றகத்தியம் வாயிலாக முத்தமிழைப் பரப்பியதால் தமிழ்முனி என்று அழைக்கப்பட்டார். சோதிடம், வைத்தியம், ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். அகத்திய நாடி எனும் பெயரால் அவர் சோதிடத்தில் வெளியிட்ட உண்மைகள் இன்று யாவருக்கும் பயனுள்ளதாக உள்ளது. பூமியில் கடற்கரையருகே மித்ரா, வருணர் என்ற இருவரும் தங்கியிருந்தனர். இந்திரனின் சாபத்தால் பூலோகத்திற்கு வந்த ஊர்வசியைக் கண்டு,  அவள் அழகில் மனதைப் பறிகொடுத்தனர். காமம் மிகக் கொண்டு தவித்த இருவரும், தமது வீரியத்தைக் குடத்தில் ஒருவரும், தண்ணீரில் ஒருவரும் இட்டனர். குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், தண்ணீரில் இட்ட வீரியத்திலிருந்து வசிட்டரும் தோன்றினார்கள். குடத்திலிருந்து தோன்றியதால் அகத்திய கும்பயோனி, குடமுனி எனும் பெயர்களைப் பெற்றார்.


ஒருமுறை சிவபூஜை செய்வதற்காக அகத்தியர் கமண்டலத்தில் கொண்டுவந்த நீரை காகம் வடிவில் வந்த விநாயகர் சாய்த்துவிட்டார். அவ்வாறு கமண்டலத்திலிருந்து வழிந்தோடிய நீரே காவேரி எனப்பெயர் பெற்றதாகப் புராணம் கூறுகின்றது. அகத்தியர், புதுச்சேரி அருகே உழவர் கரையில் ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். வேதபுரி பல்கலைக்கழகத்தில் தமிழைப் போதித்து வந்தார். அதனால் அவர் தங்கியிருந்த பகுதி அகத்தீஸ்வரம் என்பதாகும். அவ்வூரில் கட்டப்பட்ட சிவாலயத்திற்கு அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் எனப்பட்டது. அகத்தியரின் நூல்கள் தொண்ணூற்றுக்கும் மேற்பட்டவை எனக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள் சிவசாலம், சக்திசாலம், சண்முகசாலம், ஆறெழுத்தந்தாதி, கர்மவியாபகம், அகத்தியர் பூசாவிதி, அகத்தியர் சூத்திரம் 30, அகத்தியம் எனும் ஐந்திலக்கண நூல், அகத்திய சம்ஹிதை எனும் வடமொழி வைத்தியநூல், தட்சிணாமூர்த்தி குருமுரகம் நூறு, பிள்ளைத்தமிழ், ஆயுர்வேதம், வைத்திய காவியம், அமுத கலை ஞானம் போன்ற அரியவகை நூல்களை இயற்றி மனிதகுலத் தலைமுறைக்குப் பயன்பெற்று வாழும் வகையில் அளித்துள்ளார். ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த அகத்தியர் ஜீவ சமாதியான இடம் கேரளாவிலுள்ள  அனந்தசயனம் என்றழைக்கப்பட்ட இன்றைய திருவனந்தபுரம் எனக் கூறுகின்றனர். அகத்தியரிலிருந்து ஒரு சித்தர் மரபு இங்கே தொடங்கிற்று.

நன்றி
dinamalar